/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
ஆலங்குடியில் மரணத்திலும் இணை பிரியாத தம்பதி
/
ஆலங்குடியில் மரணத்திலும் இணை பிரியாத தம்பதி
ADDED : நவ 09, 2024 03:01 AM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்வாகனம், 84, இவரது மனைவி லோகாம்பாள், 78, இவர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
தொடர்ந்து, வயது முதிர்வின் காரணமாக லோகம்பாள் நேற்று மதியம் உயிரிழந்த நிலையில், அவரது கணவர் மயில்வாகனம் மனைவியின் இறுதிச்சடங்கில் இருந்தபோது, துக்கம் தாளாமல் அழுதவாறு இருந்தார். அப்போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி இறந்த துக்கம் தாளாமல் இருந்த மயில்வாகனமும் உயிரிழந்த நிலையில், இருவரின் உடலுக்கும் ஒன்றாக இறுதிச் சடங்குகள் செய்து, ஊர்வலமாக எடுத்துச் சென் ஒன்றாகவே தகனம் செய்யப்பட்டது.