ADDED : ஆக 12, 2026 09:56 PM
அ நிறம் | அளவு
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், சேரனுார் சேரனிக்கண்மாய் அருகே, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், புதிய குளம் வெட்டும் பணி நடக்கிறது. நேற்று, மண்ணை வெட்டிய போது, பழங்கால வெண்கலத்திலான சாமி மற்றும் பாம்பு உருவம் பொறிக்கப்பட்ட, 510 நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
பொன்னமராவதி தாசில்தார் பழனிச்சாமியிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த நாணயங்கள், பழங்கால செப்புக்காசுகள் எனவும், உலோக நாணயங்கள் எனவும் கூறப்படுகிறது. சேரனுாரில், தொல்லியல் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறையினர் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
