/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மாணவியருக்கு தொல்லை உடற்கல்வி ஆசிரியர் கைது
/
மாணவியருக்கு தொல்லை உடற்கல்வி ஆசிரியர் கைது
ADDED : பிப் 11, 2025 07:53 AM
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆறா-ம் வகுப்பு முதல், 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியர் சிலருக்கு, உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை அளிப்பதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று, பாதிக்கப்பட்ட மாணவியரிடம் விசாரணை நடத்தினர்.
இதில், உடற்கல்வி ஆசிரியர் அடைக்கலம், 44, என்பவர் மாணவியருக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கும் போது, மாணவியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரிந்தது.
இதுதொடர்பான புகாரில், இலுப்பூர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, நேற்று இரவு போக்சோ சட்டத்தின் கீழ், உடற்கல்வி ஆசிரியர் அடைக்கலத்தை கைது செய்து, விசாரிக்கின்றனர்.