/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட குழந்தை மீட்பு
/
தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட குழந்தை மீட்பு
ADDED : நவ 11, 2025 11:40 PM

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே பிறந்த சில மணி நேரத்திலேயே வாய்க்கால் பகுதியில் வீசப்பட்ட பெண் குழந்தை, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆத்தங்காட்டில் பொதுப் பணித்துறை வாய்க்கால் அருகே, பிறந்த சில மணி நேரங்களே ஆன பெ ண் குழந்தையை துணியில் சுற்றி துாக்கி வீசி சென்றுள்ளனர்.
கு ழந்தையின் அலறல் கேட்டு, அருகில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயிகள் சென்று பார்த்த போது, செடிகள் கிழித்து காயங்களுடன் தொப்புள் கொடியுடன் கு ழந்தை அலறிக் கொண்டிருந்தது.
அதை மீட்டு முதலுதவி கொடுத்த பொதுமக்கள், உடன், அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். குழந்தையை வீசி சென்றவர்கள் குறித்து, நாகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.

