/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
'பள்ளியில் வசதிகள் வேண்டும்' வீடியோ வெளியிட்ட மாணவியர்
/
'பள்ளியில் வசதிகள் வேண்டும்' வீடியோ வெளியிட்ட மாணவியர்
'பள்ளியில் வசதிகள் வேண்டும்' வீடியோ வெளியிட்ட மாணவியர்
'பள்ளியில் வசதிகள் வேண்டும்' வீடியோ வெளியிட்ட மாணவியர்
ADDED : நவ 09, 2025 03:10 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவியர் சிலர் வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அதில், எங்கள் பள்ளிக்கு செல்லும் சாலைகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. பள்ளி கட்டடங்கள் சேதமடைந்து, மழைநீர் வகுப்பறைக்குள் கசிவதால் சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம்.
'பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாதது பற்றி பலமுறை அரசு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும், எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் எங்கள் பள்ளி வளர்ச்சிக்கு உதவ வேண்டும்' என, கூறியுள்ளனர்.
வரும், 10ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழக முதல்வர் 10ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதால், மாணவியர் வீடியோ கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

