/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
ஆம்னி பஸ்சில் ஹவாலா ரூ.20 லட்சம் பறிமுதல்
/
ஆம்னி பஸ்சில் ஹவாலா ரூ.20 லட்சம் பறிமுதல்
ADDED : அக் 15, 2025 12:27 AM
புதுக்கோட்டை:ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட, 20 லட்சம் ரூபாய் பணத்தை புதுக்கோட்டை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் இருந்து ஆம்னி பஸ்சில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக, புதுக்கோட்டை மதுவிலக்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது. மதுவிலக்கு போலீசார் நேற்று அதிகாலை, புதுக்கோட்டை கருவேப்பிலையா ரயில்வே கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சென்னையிலிருந்து தொண்டி சென்ற ஆம்னி பஸ் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில், ஒரு பையில், 20 லட்சம் ரூபாய் இருந்தது. பணத்தை கொண்டு வந்த சென்னை, தண்டையார்பேட்டையை சேர்ந்த அமீர், 48, என்பவரிடம் போலீசார் விசாரணை செய்த போது, அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.
இது ஹவாலா பணமாக இருக்குமோ என்ற சந்தேகத்தின்படி, போலீசார் அமீரை கைது செய்து, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரி களுக்கு தகவல் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.