/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
வீடு புகுந்து பெண்ணிடம் 15 சவரன் நகை கொள்ளை
/
வீடு புகுந்து பெண்ணிடம் 15 சவரன் நகை கொள்ளை
ADDED : அக் 12, 2025 11:12 PM
கீரனுார்; குளத்துாரில், வீடு புகுந்து பெண்ணை தாக்கி, 15 சவரன் நகை, 20,000 ரூபாயை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்துாரை சேர்ந்தவர் பாலு; கொத்தனார். இவரது மனைவி லட்சுமி, 52. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த நிலையில், நோட்டமிட்டு காரில் முகமூடி அணிந்து வந்த ஐந்து பேர், பின்பக்கம் வழியே வீட்டின் உள்ளே நுழைந்தனர். பின், மின்சாரத்தை துண்டித்து, லட்சுமியை அடித்து உதைத்து, அவரிடமிருந்த நகைகள், பீரோவை உடைத்து, 15 சவரன் நகைகள், 20,000 ரூபாய் ஆகியவற்றை திருடிக்கொண்டு காரில் தப்பினர்.
இச்சம்பவம் குறித்து, கீரனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இப்பகுதியில் ஓரிரு நாட்களுக்கு முன், பகலில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி, 6 சவரன் நகை கொள்ளை, ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம், 8 சவரன் தங்க சங்கிலி பறிப்பு என, தொடரும் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.