/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
சோழர் கால சூலக்கல் கண்டெடுப்பு
/
சோழர் கால சூலக்கல் கண்டெடுப்பு
ADDED : அக் 08, 2025 03:04 AM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே சோழர் காலத்தில், ஊரணி அமைத்து கொடுத்த சூலக்கல் கண்டெடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே சித்துப்பட்டியில், 10ம் நுாற்றாண்டை சேர்ந்த பராந்தகச்சோழர் ஆட்சி யில், வரகுண இருக்கு வேள் என்ற கொடும்பாளூர் ஆட்சியாளர் தேவதானம் மற்றும் ஊரணி அமைத்து கொடுத்த அரிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை தொல்லி யல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன் கூறியதாவது:
சித்துப்பட்டி ஊரணி கரையில் கண்டெடுக்கப்பட்ட, சூலக்கல் பின்புறத் தில் கல் வெட்டும், மறுபுறம் மிகப் பெரிய சூலக்கோட்டுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. சூலம் தேவதான நிலத்தின் அடையாளம்.
தமிழகத்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்டவற்றில், மிகப்பெரிய சூலக்கல் கல்வெட்டுகளில் இது முக்கியமானது.
கல்வெட்டில், கொடும்பாளூர் வேளிர் வரகுண இருக்குவேள் என்ற ஆட்சியாளர், கோப்பரகேசரி என்ற பட்டத்தை கொண்ட பராந்தகச்சோழர் ஆட்சியில், வேள்காடை ஈஸ்வரத்து மகாதேவருக்கு, தேவதான மாக நிலம் வழங்கியதும், சிற்றுார் ஊரணியை வெட்டி அமைத்ததும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இது, புதுக்கோட்டை மாவட்ட சைவ மரபு, சோழர் கா ல மத நிர்வாக அமைப்பை காட்டும் முக்கிய சான்று.
இவ்வாறு அவர் கூறினார்.