ADDED : ஏப் 13, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், மழையூர் அருகே மீனம்பட்டியில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள திடலில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த, 570 காளைகளை, 260 மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இதில், வீரர்கள் பிடியில் சிக்காத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் ரொக்கபணம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டில் பார்வையாளராக பங்கேற்ற பொற்பனைக்கோட்டையை சேர்ந்த மாரிமுத்து, 23, காளை முட்டியதில், பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஜல்லிக்கட்டில், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மழையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.