/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
காவலர் குடியிருப்பில் துணிகரம் பெண் போலீஸ் வீட்டில் திருட்டு
/
காவலர் குடியிருப்பில் துணிகரம் பெண் போலீஸ் வீட்டில் திருட்டு
காவலர் குடியிருப்பில் துணிகரம் பெண் போலீஸ் வீட்டில் திருட்டு
காவலர் குடியிருப்பில் துணிகரம் பெண் போலீஸ் வீட்டில் திருட்டு
ADDED : ஆக 17, 2025 02:31 AM
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், போலீஸ் குடியிருப்பில் புகுந்து நகைகளை திருடிய மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை, திருக்கோணம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சம்யுக்தா, 29. புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீசில் பணியாற்றும் இவர், நேற்று காலை வீட்டை பூட்டி, சாவியை அருகில் உள்ள ஷூவில் மறைத்து வைத்து விட்டு சென்றார்.
பணிக்கு சென்று திரும்பி வந்த போது, சாவியை காணவில்லை. பூட்டை உடைத்து உள்ளே சென்ற போது, பீரோவில் இருந்த, 10 சவரன் தாலிச்செயின், 1 சவரன் சங்கிலி, ஒரு வைரத்தோடு ஆகியவை திருடு போயிருந்தன. புகாரின்படி, திருக்கோணம் போலீசார் விசாரிக்கின்றனர்.