/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
அங்கன்வாடி கூரை உடைந்தது உயிர் தப்பிய குழந்தைகள்
/
அங்கன்வாடி கூரை உடைந்தது உயிர் தப்பிய குழந்தைகள்
ADDED : நவ 23, 2024 02:19 AM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மலைக்குடிபட்டி லட்சுமிபுரத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில், 30 குழந்தைகள் படிக்கின்றனர்.
இந்த கட்டடத்தின் கூரை சிமென்ட் பூச்சு நேற்று காலை 8:30 மணிக்கு, திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, குழந்தைகள் யாரும் அங்கன்வாடிக்கு வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் அங்கன்வாடி கட்டடங்களின் நிலை, இப்படித் தான் மோசமாக உள்ளது.
சிறு குழந்தைகள் படிக்கும் இடம், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து, புதுக்கோட்டை கலெக்டர் அருணா கூறியதாவது:
பழுதடைந்த அங்கன்வாடி மையங்கள் குறித்து சர்வே எடுக்கப்படுகிறது.
மிகவும் மோசமான நிலையில் உள்ள அங்கன்வாடி மையங்களை இடித்து கட்டுவதற்கும், அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவற்றை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஆறு மாதத்தில், 182 அங்கன்வாடி மையங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு அங்கன்வாடி மையங்கள் சீரமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.