/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
வேங்கைவயலில் துக்க நிகழ்விற்கு சென்றவர்கள் விபரங்கள் சேகரிப்பு
/
வேங்கைவயலில் துக்க நிகழ்விற்கு சென்றவர்கள் விபரங்கள் சேகரிப்பு
வேங்கைவயலில் துக்க நிகழ்விற்கு சென்றவர்கள் விபரங்கள் சேகரிப்பு
வேங்கைவயலில் துக்க நிகழ்விற்கு சென்றவர்கள் விபரங்கள் சேகரிப்பு
ADDED : ஜன 31, 2025 02:41 AM
புதுக்கோட்டை:வேங்கைவயலில் துக்க நிகழ்விற்கு செல்வதற்கு முதலில் போலீசார் அனுமதி அளிக்கவில்லை, பின்னர், இறந்தவரின் உறவினர்களுக்கு மட்டும் ஊருக்குள் செல்ல, அவர்களிடம் விபரங்கள் சேகரித்து அனுமதி அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் காவலர் முரளிராஜா பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது,
இந்நிலையில், அவரது பாட்டி கருப்பாயி, 85, என்பவர் நேற்று வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். ஏற்கனவே, கடந்த ஐந்து தினங்களாக குற்றம் சாட்டபட்டுள்ள முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோரின் உறவினர்கள் அப்பகுதியில் ஐந்து தினங்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனால், மூதாட்டி இறப்பை காரணம் காட்டி வெளியூரிலிருந்து பலர் ஊருக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவார்கள் என்ற காரணத்தால், முரளிராஜாவின் பாட்டியின் இறப்பிற்கு வெளியூரில் இருந்து வரும் நபர்கள் யாரையும் உள்ளே போலீசார் அனுமதிக்கவில்லை.
ஏற்கனவே, கடந்த இரண்டு வருடங்களாக ஊருக்குள் வெளி நபர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூதாட்டி இறப்பிற்கு கூட வெளி ஊரில் இருந்து யாரும் அனுமதிக்கப்படாத நிலையை குற்றம் சாட்டி முரளிராஜா உறவினர்கள் கருப்பாயின் உடலை சிறிது நேரம் சாலையில் வைத்தனர்.
பின், அவர்களது கோரிக்கையை ஏற்று உறவினர்களை மட்டும் அவர்களது விவரங்களை சேகரித்து பின் வேங்கைவயல் பகுதிக்குள் செல்ல போலீசார் அனுமதி அளித்தனர்.

