/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
ஆட்டாங்குடி தண்டலையில் சிவன் கோவில் கண்டுபிடிப்பு
/
ஆட்டாங்குடி தண்டலையில் சிவன் கோவில் கண்டுபிடிப்பு
ADDED : அக் 27, 2024 01:59 AM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் காளிதாஸ் வரலாற்று ஆய்வு குழுவினர் அறந்தாங்கி அருகே, ஆட்டாங்குடி தண்டலை கிராமத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, தண்டலை கண்மாயில் சோழர்கால சிவன் கோவில் ஒன்றை கண்டுபிடித்தனர்.
ஆய்வாளர்கள் கூறுகையில், 'சிவலிங்கம் மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுகிறது. நந்தி காது மடல் விரித்தும், கழுத்து மணிப்பட்டை பூட்டியும், குருளை கொம்புகளுடன் கால்கள் மடக்கிய வண்ணம் காட்சி தருகிறது. ஆட்டாங்குடி பெருமாள் கோவில் கல்வெட்டில் குறிப்பிடப்படும், ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழதேவற்கு யாண்டு - சயரு, 45வது மறமடக்கிச்சதுர்வேதி மங்கலத்து என்று வருவதனால், இது முதலாம் குலோத்துங்க சோழனின் 45வது ஆட்சி ஆண்டில் - கி.பி., 1115ல் கட்டப்பட்ட கோவிலாகும்' என்றனர்.