ADDED : ஜன 20, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே, அண்டனுார் கிராமத்தில் அய்யனார், மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலை புதுப்பித்து கட்டுவது, கோவிலில் முதல் மரியாதை பெறுவது தொடர்பாக, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு கோஷ்டியினர் இடையே 20 ஆண்டுகளாக பிரச்னை நிலவுகிறது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஒரு தரப்பினர் கோவிலை புதுப்பித்துக் கட்ட கட்டுமான பொருட்களை இறக்கினர்.
மற்றொரு தரப்பினர், கட்டுமானப் பணிகளைச் செய்யக்கூடாது என தடுத்தனர். வாக்குவாதம் முற்றி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.
தாசில்தார் உத்தரவுப்படி இரு தரப்பினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, கட்டுமான பொருட்களை பறிமுதல் செய்து, தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.