/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி நிறைவு
/
பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி நிறைவு
ADDED : ஜூலை 16, 2025 02:50 AM

புதுக்கோட்டை:தொல்லியல் சார்ந்த இடங்களில், புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு, தமிழக திறந்த நிலை பல்கலைக்கழகத்தால், 2021ம் ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்ட அகழாய்வில், 22 குழிகள் தோண்டப்பட்டு, 533 தொல்பொருட்களும், பல்வேறு வகையான பானை ஓடுகளும், கீறல் குறியீடுகளும் செங்கல் கட்டுமானங்களும், எலும்பு முனை கருவி, தங்க மூக்குத்தி, தோடு, சூதுபவள மணிகள், தமிழ் பிராமி எழுத்துப்பொறிப்பு, மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ரவுட் வகை பானை ஓட்டில் வட்டச்சில், ரோம நாட்டு ஜாடி ஓடுகள் கிடைத்தன.
கடந்த 2023- - 24ல் நடந்த 2ம் கட்ட அகழாய்வில், செப்பால் செய்யப்பட்ட மைத்தீட்டும் குச்சி, செம்பு ஆணிகள்.
முக்கோண வடிவ தேய்ப்புக்கல், அகேட் கல்லின் மூலப்பொருள் ஒன்றும் கிடைத்தன. 203 நாட்களாக நடைபெற்ற இந்த அகழாய்வு பணிகளில், 1,982 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
கடந்த மே 12ம் தேதி, 2ம் கட்ட அகழாய்வு பணி முடிவுற்று, மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்றது. அகழாய்வுக் குழிகள் மூடும் பணி நேற்று துவங்கியது.
தொல்பொருட்கள் ஆவணப்படுத்தும் பணிகள் பின் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

