/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மின்சாரம் பாய்ந்து பெண் எஸ்.ஐ., பலி
/
மின்சாரம் பாய்ந்து பெண் எஸ்.ஐ., பலி
ADDED : அக் 05, 2025 02:07 AM

புதுக்கோட்டை:மணமேல்குடி போலீஸ் எஸ்.ஐ., மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அரியலுார் மாவட்டம், பொன்பரப்பியை சேர்ந்த போலீஸ்காரர் சக்திமுருகன்; இவரது மனைவி லட்சுமி ப்ரியா, 33, புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2016ல் எஸ்.ஐ., பயிற்சி முடித்து, பல்வேறு மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்த லட்சுமி ப்ரியா, கடந்த ஏப்ரலில் மணமேல்குடி போலீஸ் ஸ்டேஷனில் பணியில் சேர்ந்தார்.
காலாண்டு விடுமுறையில், குழந்தைகளை பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டு, அவர் மட்டும் தனியாக, மணமேல்குடி, வடக்கூர் பகுதியில் வாடகை வீட்டில் இருந்துள்ளார். நேற்று காலை, அவரது சீருடையை 'அயர்ன்' செய்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, லட்சுமி ப்ரியா துாக்கி வீசப்பட்டார்.
வீட்டில் யாரும் இல்லாததால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பணிக்கு அவர் வராததால், சக போலீசார் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது, அவர் இறந்து கிடந்தார். இது குறித்து, மணமேல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.