/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
அனுமதியின்றி இயங்கிய மருத்துவமனைக்கு சீல்
/
அனுமதியின்றி இயங்கிய மருத்துவமனைக்கு சீல்
ADDED : ஆக 06, 2025 03:20 AM
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் அரசு அனுமதியின்றி செயல்பட்ட மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே தான்றிஸ்வரத்தில் அரசு அனுமதியின்றி மருத்துவம் பார்க்கப்படுவதாகவும், மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுவதாகவும், புதுக்கோட்டை மாவட்ட இணை இயக்குனருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து நேற்று மாவட்ட இணை இயக்குனர் பிரியாதேன்மொழி தலைமையில், மாவட்ட மனநல மருத்துவ அலுவலர் பிரசாத், இலுப்பூர் தாசில்தார் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு அரசு அனுமதியின்றி மருத்துவமனை இயங்கி வந்தது தெரிந்தது.இந்த மருத்துவமனையில் உரிய மருந்து உரிமம் இல்லாத மருந்து பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும், பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகள் பொருட்கள் அனைத்தும் இலுப்பூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது.