/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மனைவியை கொன்ற கணவர் போலீசுக்கு பயந்து தற்கொலை
/
மனைவியை கொன்ற கணவர் போலீசுக்கு பயந்து தற்கொலை
ADDED : ஏப் 27, 2025 03:08 AM
புதுக்கோட்டை,: புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் அருகே கீழகாயாம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி வீரமுத்து, 35. இவரது மனைவி ராஜேஸ்வரி, 30. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
ராஜேஸ்வரி நடத்தையில் சந்தேகப்பட்ட வீரமுத்து, மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில், தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, வீரமுத்து அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
படுகாயமடைந்த ராஜேஸ்வரி உயிரிழந்தார். இந்நிலையில், போலீசுக்கு பயந்த வீரமுத்து, நேற்று காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பட்டிவிடுதி போலீசார், இருவரின் உடலையும் மீட்டு, விசாரிக்கின்றனர்.

