/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
வேகமாக பைக் ஓட்டியதை தட்டி கேட்டவருக்கு வெட்டு
/
வேகமாக பைக் ஓட்டியதை தட்டி கேட்டவருக்கு வெட்டு
ADDED : நவ 02, 2025 10:59 PM
புதுக்கோட்டை:  வேகமாக பைக் ஓட்டியதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு வெட்டு விழுந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் அருகே பெரியமூலிப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா, 42. இவரது மகன் நரேந்திரன், 16. இவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம், அவரது நண்பர்களுடன் சாலையில் கேக் வெட்டி கொண்டாடினார்.
அப்போது, அப்பகுதியில் பைக்கில் வேகமாக சென்றனர். இதை, அப்பகுதியைச் சேர்ந்த பாண்டியன், 38, தட்டிக்கேட்டார். இதில், சிறுவன் நரேந்திரனுக்கு ஆதரவாக கருப்பையா, அவரது தம்பி கோவிந்தராஜ், 36, ஆகியோர் பாண்டியனிடம் தகராறு செய்தனர். அப்போது, பாண்டியனை அரிவாளால் கோவிந்தராஜ் வெட்டியதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த பாண்டியன், திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். நரேந்திரன், கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்த மண்டையூர் போலீசார், கருப்பையாவை தேடுகின்றனர்.

