/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு
/
தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு
தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு
தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு
ADDED : ஜன 11, 2024 11:02 PM
புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே, தச்சன்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு, காளை உரிமையாளருக்கு உதவியாக வந்த வாலிபர் ஒருவர் காளை முட்டியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றவர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே, தச்சன்குறிச்சி கிராமத்தில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு, கடந்த 6ம் தேதி நடைபெற்றது, இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன. இதில், மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம், அம்பேத்கர் தெருவை சேர்ந்த ராஜு மகன் மதுரா, 18, இவரது உறவினரின் ஜல்லிக்கட்டு காளை, தச்சன்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டது. அவருடன் மதுராவும் ஜல்லிக்கட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது, வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று, சீறிப்பாய்ந்து மதுராவை முட்டி தள்ளியது. இதில், வயிற்றில் படுகாயம் அடைந்த மதுராவை அருகில் இருந்த மருத்துவவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மதுரா சிகிச்சை பலனின்றி, இன்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து, கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

