/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
புதுக்கோட்டையில் தொடரும் திருட்டு மக்கள் அச்சம்
/
புதுக்கோட்டையில் தொடரும் திருட்டு மக்கள் அச்சம்
ADDED : ஆக 20, 2025 11:35 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், மர்ம நபர்கள், பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டுவதால், மக்கள் அச்சம் அடைந்தனர்.
புதுக்கோட்டை, அன்னச்சத்திரம் பகுதியில், பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து, 89 சவரன் நகைகள், 170 கிராம் வெள்ளி பொருட்கள், பணத்தை மர்ம நபர் கள் திருடிச் சென்றனர்.
பாசில் நகரில், விவசாயி ஒருவர் வீட்டில், 160 சவரன் நகைகள், 3 லட்சம் ரூபாயை திருடிச் சென்றனர். மணப்பட்டியில், திருமயம் மகளிர் போலீஸ் பெண் எஸ்.ஐ., மற்றும் அவரது கணவரையும் தாக்கி, 10 சவரன் நகைகளை பறித்துச் சென்றனர்.
திருக்கோகர்ணம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில், ஒரு வீட்டில் 11 சவரன் நகைகள், வைரத்தோடு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, மர்ம நபர்கள் கைவரிசையை காட்டி வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.