/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
கார் மோதி கர்ப்பிணி பலி ரூ.25 லட்சம் நிதியுதவி
/
கார் மோதி கர்ப்பிணி பலி ரூ.25 லட்சம் நிதியுதவி
ADDED : நவ 29, 2024 02:15 AM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், குளத்துார் பள்ளத்துப்பட்டியை சேர்ந்த, வெளிநாட்டில் பணிபுரியும் மணிகண்டன் என்பவர் மனைவி விமலா, 28. இவர், 2018ம் ஆண்டு போலீசில் சேர்ந்து தற்போது, மண்டையூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிந்தார். இவருக்கு திருமணமாகி மகன் உள்ளார். இவர் தற்போது ஒன்பது மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.
இவர், வீட்டில் இருந்து, நேற்று பணிக்கு சென்ற போது, புதுக்கோட்டை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அண்ணா பல்கலைக்கழகம் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, புதுக்கோட்டை நிஜாம் காலனியைச் சேர்ந்த வெனின்ராஜ், 30, என்பவர் ஒட்டி வந்த, 'மகிந்திரா எக்ஸ்.யு.வி., 700' என்ற கார், பெண் போலீஸ் ஒட்டி சென்ற மொபட் பின்புறம் வந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த விமலா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து, தகவல் அறிந்த மண்டையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விமலாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிந்து விசாரணை செய்கின்றனர்.
இதற்கிடையே, சாலை விபத்தில் இறந்த கர்ப்பிணி போலீஸ் விமலாவின் குடும்பத்தினருக்கு, 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.