/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
அய்யனார் கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு
/
அய்யனார் கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு
ADDED : செப் 19, 2024 01:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொத்தக்கோட்டை கிராமத்தில் சிங்கமுத்து அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் 2023-ம் ஆண்டு தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவிலில் பரிவார தெய்வங்களின் சிலைகளை, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.
புகாரின் படி, போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, சாமி சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.