/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மினி லாரி மோதியதில் மாணவர் சாவு
/
மினி லாரி மோதியதில் மாணவர் சாவு
ADDED : ஆக 22, 2025 01:31 AM
புதுக்கோட்டை:பைக்கில் சென்ற கல்லுாரி மாணவர், மினி லாரி மோதியதில் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு, 18. இவர், கல்லணேந்தல் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நண்பர்களான பிரகாஷ், 18, மற்றும் சவுந்தர்ராஜ், 18, ஆகியோருடன், நேற்று மதியம் ஒரே பைக்கில் கல்லுாரிக்கு சென்றார். நாணக்குடி முக்கம் வளைவில் திரும்பிய போது, ஆவுடையார்கோவிலில் இருந்து அறந்தாங்கி நோக்கிச் சென்ற மினி லாரி, பைக் மீது மோதியது.
இதில், நிலை தடுமாறி விழுந்த சுரேஷ்பாபு உயிரிழந்தார். பிரகாஷ், சவுந்தர்ராஜ் பலத்த காயங்களுடன், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆவுடையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.