/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மாணவர்கள் துப்புரவு பணி; ஹெச்.எம்., 'சஸ்பெண்ட்'
/
மாணவர்கள் துப்புரவு பணி; ஹெச்.எம்., 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 15, 2025 06:23 AM
நமணசமுத்திரம்; அரசு பள்ளியில், மாணவர்கள் கழிப்பறை சுத்தம் செய்த சம்பவத்தில், தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே, நமணசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கலா தலைமை ஆசிரியராகவும், உதவி ஆசிரியராக தினேஷ் ராஜா பணிபுரிந்தனர்.
கடந்த 10-ம் தேதி, பள்ளி மாணவர்கள், அங்குள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து கேட்ட போது, 'காலை உணவு திட்ட சமையலர், தன் மகன் மற்றும் ஒரு மாணவரை கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்து, அதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களிலும் பரவ செய்துள்ளார்' என, தலைமை ஆசிரியர் கலா குற்றம்சாட்டினார்.
அறந்தாங்கி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கலாராணி, வட்டார கல்வி அலுவலர் கருணாகரன் ஆகியோர் நேற்று, பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். தலைமை ஆசிரியர் கலா, மாணவர்களை கொண்டு பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ததோடு, காலை உணவுத்திட்ட சமையலர் மீது பழி சுமத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து, கலாவை சஸ்பெண்ட் செய்தும், தினேஷ்ராஜாவை பணியிட மாற்றம் செய்தும், மாவட்ட கல்வி அலுவலர் கலாராணி உத்தரவிட்டார்.