/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மாணவியை கடத்தியவர் போக்சோவில் கைது
/
மாணவியை கடத்தியவர் போக்சோவில் கைது
ADDED : டிச 26, 2024 11:44 PM
புதுக்கோட்டை:கறம்பக்குடி அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக, போக்சோ வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வௌ;ளாளவிடுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும், 17 வயது மாணவி, பள்ளிக்கு சென்றபோது, மீண்டும் வீடு திரும்பவில்லை என்று அவரது தாய் நேற்று முன் மழையூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீசார் விசாரணையில், காணாமல் போன மாணவியை மழையூர் அருகே அதிரான்விடுதியை சேர்ந்த ராஜேஷ், 20, என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றது தெரிந்தது.
தொடர்ந்து, மழையூர் போலீசார் மாணவியை மீட்டு வந்து, மாணவியை கடத்திச் சென்ற ராஜேஷ் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

