/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
பள்ளி மாணவிக்கு தொல்லை ஜவுளிக்கடை ஊழியர் கைது
/
பள்ளி மாணவிக்கு தொல்லை ஜவுளிக்கடை ஊழியர் கைது
ADDED : அக் 19, 2025 03:22 AM
புதுக்கோட்டை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த , ஜவுளிக்கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், காட்டூரை சேர்ந்தவர் கஜேந்திரன், 20; ஜவுளிகடை ஊழியர்.
இவர் வேலை பார்த்த கடைக்கு, மாத்துரை சேர்ந்த பள்ளி மாணவியர் சிலர் துணி எடுக்க சென்ற போது, கஜேந்திரன் ஒரு மாணவியின் மொபைல் போன் எண்ணை பெற்று, அடிக்கடி பேசி, ஆசை வார்த்தை கூறினார். இரு தினங்களுக்கு முன், மாணவி திடீரென வீட்டிலிருந்து மாயமானார்.
மாத்துார் போலீசார் விசாரணையில் கஜேந்திரனுடன் சென்றது தெரியவந்தது. தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் மாணவியை மீட்ட போலீசார், அவரை கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த கஜேந்திரனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.