ADDED : அக் 17, 2025 07:47 PM
புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே தீத்தான்விடுதி ஊராட்சியில், பட்டா மாறுதலுக்கு, 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக பெண் வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், சுக்கிரன்விடுதி கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ் , 40. பட்டா மாறுதலுக்காக தீத்தான்விடுதி வி.ஏ.ஓ., ஜாஸ்மின்பானுவை, இவர் அணுகினார்.
அப்போது, பட்டா மாறுதலுக்கு, 10,000 ரூபாய் லஞ்சம் கேட் டதாக கூறப்படுகிறது. தேவதாஸ், 4,000 ரூபாய் கொடுத்து விட்டு மீதி தொகையை தீபாவளி முடிந்து தருவதாக கூறினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, கறம்பக்குடி தாசில்தார் ஜமுனா, தீத்தான்விடுதி வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு சென்று விசாரித்தார்.
மேலும், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா விசாரித்ததில், வி.ஏ.ஓ., ஜாஸ்மின்பானு லஞ்சம் வாங்கியது தெரிந்தது. நேற்று அவரை சஸ்பெண்ட் செய்து ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்.