/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
ஆலங்குடி அருகே திருக்கைவேல் திருப்புகழ் பாராயண நிகழ்ச்சி
/
ஆலங்குடி அருகே திருக்கைவேல் திருப்புகழ் பாராயண நிகழ்ச்சி
ஆலங்குடி அருகே திருக்கைவேல் திருப்புகழ் பாராயண நிகழ்ச்சி
ஆலங்குடி அருகே திருக்கைவேல் திருப்புகழ் பாராயண நிகழ்ச்சி
ADDED : ஆக 26, 2024 09:04 PM

திருக்கைவேல் திருப்புகழ் பாராயண நிகழ்ச்சி நடந்தது.
புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே திருவரங்குளத்தில் வல்லநாட்டு நகரத்தார்கள் சபா மண்டபத்தில் திருக்கைவேல் திருப்புகழ் அடியார்கள் திருக்கூட்டம் பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திருவரங்குளத்தில் திருக்கைவேல் திருப்புகழ் அடியார்கள் திருக்கூட்டம் பாராயண நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று 4வது ஆண்டாக நடைபெற்றது.
இதில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் முருகன் பக்தர்கள் கூகுல்மீட்டில் 47 நாட்கள் திருப்புகழ் பாராயண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர், நேற்று திருவரங்குளத்தில் உள்ள ஸ்ரீஅரங்குளநாதர் உடனுறை பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு பலர் வருகை தந்து, அங்கிருந்து திருப்புகழ் பாடிக்கொண்டு ஊர்வலமாக வந்து, வல்லநாட்டு நகரத்தார்கள் சபா மண்டபத்திற்கு வந்தனர். அங்குள்ள முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, திருக்கைவேல் திருப்புகழ் அடியார்கள் அனைவரும் முருகனின் பக்தி பாடல்கள் மற்றும் 108 முறை பாராயணம் பாடப்பட்டது. வேல் மாறல், வேல் மயில் சேவல் விருத்தம் பாராயணம் பாடப்பட்டது.மேலும், சிறுவர்கள் பங்கேற்று ஆர்மாக முருகனின் திருப்புகழ் பாடல்களை பாடியதை பலர் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். இந்த திருக்கைவேல் திருப்புகழ் அடியார்கள் திருக்கூட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பெண் அடியார்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.