/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
'நேரில் உங்களை சந்திக்க முடியாது' ஓட்டு போட்ட மக்களிடம் துரை
/
'நேரில் உங்களை சந்திக்க முடியாது' ஓட்டு போட்ட மக்களிடம் துரை
'நேரில் உங்களை சந்திக்க முடியாது' ஓட்டு போட்ட மக்களிடம் துரை
'நேரில் உங்களை சந்திக்க முடியாது' ஓட்டு போட்ட மக்களிடம் துரை
ADDED : அக் 19, 2024 03:10 AM
புதுக்கோட்டை,:திருச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை சட்டசபை தொகுதிக்குள் வரும் பெருங்களூர், அண்டக்குளம், இச்சடி, முள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில், தனக்கு ஓட்டளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார் திருச்சி எம்.பி.,யான துரை. அப்போது, அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது:
சட்டசபை உறுப்பினருக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால், ஒரு எம்.பி.,க்கு ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து 5 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்படுகிறது. ஒரு சட்டசபை தொகுதிக்கு, 80 லட்சம் ரூபாய் மட்டுமே என்னால் ஒதுக்க முடியும். அதனால், எம்.பி.,க்கான தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என பார்லிமென்டில் குரல் எழுப்புவேன்.
இரண்டு மாதங்களாக ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, குறைகளையும் கேட்டு வருகிறேன். இது தான் என் கடைசி நிகழ்ச்சியாக இருக்கும். அதனால், இனி வரும் காலங்களில் நேரில் வந்து, மக்களை சந்திக்க வாய்ப்பு இருக்குமா என தெரியவில்லை.
அதனால், எந்த கோரிக்கையாக இருந்தாலும், மனுவாக எழுதி எம்.பி., அலுவலகத்தில் கொடுத்து விடுங்கள். அங்கிருந்து உங்கள் கோரிக்கை எனக்கு வந்துவிடும். முடிந்த வரை கோரிக்கைகள் நிறைவேற பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.