/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
த.வெ.க., கொடி கட்டிய கார் விபத்து; போதை நபர்களுக்கு கும்மாங்குத்து
/
த.வெ.க., கொடி கட்டிய கார் விபத்து; போதை நபர்களுக்கு கும்மாங்குத்து
த.வெ.க., கொடி கட்டிய கார் விபத்து; போதை நபர்களுக்கு கும்மாங்குத்து
த.வெ.க., கொடி கட்டிய கார் விபத்து; போதை நபர்களுக்கு கும்மாங்குத்து
ADDED : பிப் 03, 2025 12:14 AM

புதுக்கோட்டை; த.வெ.க., கட்சி கொடி கட்டிய காரில் சென்று விபத்தை ஏற்படுத்திய போதை வாலிபர்கள் மீது பொதுமக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நேற்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது.
திருமயம் அண்ணா சீரணி கலையரங்கில் தொடங்கி, திருமயம் கடைவீதி, ஸ்டேட் பேங்க், புதுக்கோட்டை சாலையில் மாரத்தான் நடைபெற்றது. மாரத்தான் தொடங்கியதும் நுாற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் போட்டி போட்டு ஓடினர்.
அப்போது, அவ்வழியாக நடிகர் விஜயின் த.வெ.க., கட்சி கொடி கட்டி வந்த கார் ஒன்று தாறுமாறாக ஓடி, சாலையோரம் நின்றதண்ணீர் லாரி மீது மோதி நின்றது.
இதைப்பார்த்த பொதுமக்கள், மாரத்தானில் பங்கு பெற்ற இளைஞர்கள் அலறியடித்து ஓடினர். காரில் இருந்த மூன்று இளைஞர்கள் மது போதையில் இருந்தது தெரியவந்தது.
ஆத்திரமடைந்த மக்கள் மூன்று பேரையும் சரமாரியாக தாக்கினர். திருமயம் போலீசார் அவர்களை மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
முதற்கட்ட விசாரணையில், கார் ஓட்டியது சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றிய த.வெ.க., முன்னாள் நிர்வாகி மணி என, தெரியவந்தது. மூன்று பேர் மீதும் போலீசார் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து, 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.