/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
திருவிழாவில் இருதரப்பு மோதல்; இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு
/
திருவிழாவில் இருதரப்பு மோதல்; இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு
திருவிழாவில் இருதரப்பு மோதல்; இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு
திருவிழாவில் இருதரப்பு மோதல்; இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு
ADDED : மார் 18, 2025 01:21 AM

புதுக்கோட்டை; ஆலங்குடி அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இன்ஸ்பெக்டர் மண்டை உடைந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கோவிலுாரில் உள்ள பழமைவாய்ந்த பாலபுரீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே பிரச்னை உள்ளது. இதற்கிடையே, திருப்பணி முடிந்து கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று இரவு சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், அதை சுமந்து செல்லும் பிரச்னையில் அவ்விழா நடைபெறவில்லை. பின்னர், அங்கிருந்த மைக் செட்டை நிறுத்துமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
அதை நிறுத்த சென்ற வாலிபருக்கும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் தகராறு ஏற்பட்டு, அடிதடியானது. இதில், அங்கிருந்த சேர்களை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த ஆலங்குடி டி.எஸ்.பி., கலையரசன் ஓட்டம் பிடித்தார். அந்த நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குடி இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு மூன்று தையல்கள் போடப்பட்டன. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள், நேற்று இரவு புதுக்கோட்டை --- ஆலங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை எஸ்.பி., அபிஷேக் குப்தா விரைந்து பேச்சு நடத்தினார்.
அவரது சமரசத்தை ஏற்று, மக்கள் மறியலை கைவிட்டனர். இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இன்ஸ்பெக்டரை பார்த்து, எஸ்.பி., ஆறுதல் கூறினார்.