/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
கறி சோறு பிரியர்களுக்கு வாட்ஸாப் குரூப்
/
கறி சோறு பிரியர்களுக்கு வாட்ஸாப் குரூப்
ADDED : ஜூலை 22, 2025 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் அம்மன், முனியப்பன் மற்றும் கருப்பர் கோவில்களில், ஆடித் திருவிழாவும், கிடா வெட்டு பூஜையும் நடைபெறுகிறது.
பூஜையின் போது, கிடாக்கள் பலியிட்டு, வழிபாடு நடத்தி, இறைச்சியை சமைத்து, அன்னதானம் வழங்கப்படுகிறது.
புதுக்கோட்டையில், நடக்கும் கிடா வெட்டு பூஜை மற்றும் திருவிழா குறித்து அறிந்துகொள்ளும் வகையில், 'பூஜை சோறு' என்ற வாட்ஸாப் குரூப் தொடங்கி, அதில், தகவல்கள் பதி விடப்பட்டு வருகிறது.
கிடா வெட்டு பூஜை நடக்கும் இடம், நாள், நேரம் போன்ற தகவல்கள் அதில் இடம் பெறுகிறது.