நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கல்லாலங்குடியைச் சேர்ந்த கூடை முடையும் தொழிலாளி ரஞ்சித், 23. நேற்று இரவு, 9:00 மணிக்கு பைக்கில் மறமடக்கியில் இருந்து ஆலங்குடிக்கு வந்தார். அப்போது, நான்கு பேர், இரு பைக்குகளில் அவரை விரட்டி வந்தனர்.
ஆலங்குடியில் உள்ள டாஸ்மாக் கடை முன் பைக்கை நிறுத்தி விட்டு, தப்பிக்க அவர் முயன்றார். ஆனால் விரட்டி வந்த நால்வரும், ரஞ்சித்தை கழுத்து, தலையில் அரிவாளால் வெட்டி விட்டு, தப்பியோடி விட்டனர்.
முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.