sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விவசாயிகள் இழப்பீடு காசோலையில் குழப்பம்

/

விவசாயிகள் இழப்பீடு காசோலையில் குழப்பம்

விவசாயிகள் இழப்பீடு காசோலையில் குழப்பம்

விவசாயிகள் இழப்பீடு காசோலையில் குழப்பம்


ADDED : ஜூலை 13, 2011 10:04 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே பூக்குளம் கூட்டுறவு வங்கியில் வழங்கபட்ட இழப்பீடு தொகைக்கான காசோலை போலியாக இருக்கும் என்ற சந்தேகத்தால் திருப்பி அனுப்பப்பட்டது.

பாதிக்கபட்ட விவசாயத்திற்கு உரிய இழப்பீடு தொகையை கூட்டுறவு வங்கிகளில் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த மாதத்திலிருந்து மாவட்ட அதிகாரிகளின் நேரடி பார்வையில், கூட்டுறவு வங்கிகளில் பயனாளிகளுக்கு காசோலை வழங்கபட்டது. அதை மத்திய கூட்டுறவு வங்கியில் கொடுத்தால் இந்த காசோலைக்கு ஏற்கனவே பணம் பட்டுவாடா செய்ததாக வங்கி ஊழியர்கள் திருப்பியனுப்புகின்றனர். மேலும் முதுகுளத்தூர் அருகே பூக்குளம் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு வழங்கபட்ட காசோலையில் தேதி குறிப்பிடாமல், தனி அலுவலர் கையெழுத்து அழிக்கபட்டுள்ளது பல்வேறு சந்தேகத்தை எழுப்புகிறது.



விவசாயி மாதவன் கூறும்போது, ''எனக்கு வழங்கபட்ட காசோலையில் தேதி குறிப்பிடபடாமல், அதிகாரி கையெழுத்து திருத்தம் செய்யபட்டிருந்ததால் மத்திய வங்கியில் பணபட்டுவாடா செய்ய மறுத்தனர். ஆனால் இதுகுறித்த தகவல் வெளியே தெரிந்ததும் கூட்டுறவு வங்கியினர் வீட்டிற்கே வந்து, போலி காசோலையை பெற்று பணத்தை கொடுத்தனர்,'' என்றார். கடலாடி மத்திய வங்கி கிளை மேலாளர் ஜோசப் மேரி கூறியதாவது: பூக்குளம் கூட்டுறவு வங்கியில் பயனாளிகளுக்கு வழங்கபட்ட காசோலையில் தேதி பூர்த்தி செய்யாமல், தனி அலுவலர் கையெழுத்து அடிக்கப்பட்டதால் காசோலை முறைகேடு நடந்துள்ளதா, என்ற சந்தேகத்தால் பணம் வழங்காமல் திருப்பி அனுப்பினோம், என்றார்.










      Dinamalar
      Follow us