
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், : -ராமநாதபுரம் கேணிக்கரையில் நீட் தேர்வை கண்டித்து முஸ்லிம் மாணவர்கள் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் வரிசை முகமது தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைச் செயலாளர் அப்துல் ஜப்பார், அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகி பரக்கத் அலி, மாவட்டத் துணைத் தலைவர்கள் சாதுல்லாகான், சித்திக், நகர தலைவர் முகமது காசிம், செயலாளர் சிராஜ்தீன், பொருளாளர் காஜாமைதீன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.