ADDED : செப் 29, 2026 03:21 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் ஜூலை 3ல் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு மதுரை மாநகராட்சி உதவி கமிஷனர் குமரன் பொறுப்பு கமிஷனராக பணிபுரிந்தார். இந்நிலையில் திருச்சி மாவட்டம் துறையூர் கமிஷனர் ஏ.கண்ணன் ராமநாதபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் நேற்று ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அவருக்கு அலுவலர்கள், கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். –––
