ADDED : செப் 07, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி: கடலாடி அருகே நரசிங்க கூட்டம் கிராமத்தில் புதிய பாரதம் எழுத்தறிவு திட்ட மையத்தில் எழுத்தறிவு தினம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கடலாடி வட்டாரக் கல்வி அலுவலர் வசந்த பாரதி தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் முன்னிலை வகித்தார்.
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர் சத்யா தேவி மற்றும் எழுத்தறிவு திட்ட கற்போர் கலந்து கொண்டனர். திட்டத்தின் நோக்கம் பற்றி பொதுமக்களிடம் விளக்கி கூறப்பட்டது.