
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே ஏனாதி தேவர்புரம் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் விழா நடந்தது.
நேற்று காலை 9:00 மணிக்கு கணபதி வழிபாடு, கோ பூஜை,நாடி சந்தனம், இரண்டாம் கால பூஜை நடந்தது.
பின் கடம் புறப்பாட்டுக்கு பின்பு கும்பநீர் ஊற்றப்பட்டது. விநாயகர் பால், சந்தனம்,இளநீர் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது.

