/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடை விழா கொண்டாடிய 10 கிராம மக்கள்
/
கோடை விழா கொண்டாடிய 10 கிராம மக்கள்
ADDED : மே 16, 2024 06:27 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் குடும்ப விழாவாக கோடை விழா நடத்தி மகிழ்ந்தனர்.
ராமநாதபுரம் கமுதி பகுதி கிராமங்களை சேர்ந்தவர்கள் ராமநாதபுரம் நகர் பகுதிக்கு வேலைக்காக வந்தனர். இவர்கள் தங்களுக்குள் அமைப்பை ஏற்படுத்தி ஆண்டு தோறும்கோடை விழாவை குடும்ப விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
உத்தன்லாகல், சேமனுார், உரத்துார், சித்துடையான், ஆண்டநாயகபுரம்,பொழிகால், களரி, தீயனுார், சூரங்குளம் ஆகிய பத்து கிராமங்களைசேர்ந்தவர்கள் ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள தனியார் மகாலில்கோடை விழா நடத்தினர்.
உத்தன்லாகல் உறவின் முறை 7ம் ஆண்டு துவக்கவிழாவும் நடந்தது. இதில் 10 கிராமங்களை சேர்ந்தவர்கள்குடும்பத்துடன் விழாவில் பங்கேற்றனர்.
இதில் சிறு குழந்தைகளுக்கு போட்டிகள், பெரியவர்களுக்கு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
பத்தாம் வகுப்பு பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்குபரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன், நத்தம்ஊராட்சித்தலைவர் போத்தி, ராஜசூரிய மடை ஊராட்சித்தலைவர் பாலாதேவி, அரப்போது ஊராட்சித்துணைத் தலைவர் குரு, 10 கிராமங்களின் கிராம தலைவர்கள்பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை உத்தன்லாகல் கிராம உறவின் முறை இளைஞர்பாசறை ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல், தலைவர் வழக்கறிஞர்சுரேஷ்குமார், உத்தன்லாகல் கிராம மக்கள் செய்திருந்தனர்.