/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துணை ஜெயிலர்களாக 11 பேருக்கு பதவி உயர்வு
/
துணை ஜெயிலர்களாக 11 பேருக்கு பதவி உயர்வு
ADDED : ஜூலை 28, 2024 03:07 AM
ராமநாதபுரம்:தமிழகத்தில் கிளை சிறைகளில் உதவி ஜெயிலர்களாக பணிபுரியும் 11 பேருக்கு துணை ஜெயிலர்களாக பதவி உயர்வு வழங்கி சிறைத்துறை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டார்.
நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் பணிபுரிந்த எஸ்.அருண்ராஜ் பதவி உயர்வு பெற்று துணை ஜெயிலராக சிவகங்கை மாவட்டம் புரசடை உடைப்பு திறந்த வெளி சிறைக்கு மாற்றப்பட்டார்.
பி.மனோரஞ்சிதம் கோவை மத்திய சிறையில் பதவி உயர்வு பெற்றார்.
சென்னை புழல் மத்திய சிறை பிரிவு -2ல் பணிபுரிந்த ஆர்.முத்து திருநெல்வேலி மத்திய சிறைக்கும், ஜி.புகழரசிபுழல் மத்திய சிறை பிரிவு -2 செங்கல்பட்டு மாவட்ட சிறைக்கும் மாற்றப்பட்டனர்.
கோவை மத்திய சிறை என்.நாகேஸ்வரன் தேனி மாவட்ட சிறைக்கும், ஆர்.சிவபெருமாள் ஆரூர் கிளை சிறையில் இருந்து வேலுார் மத்திய சிறைக்கும், ஏ.அப்துல் ரஹீம் மதுரை மத்திய சிறையில் இருந்து பேரூரணி மாவட்ட சிறைக்கும், ஏ.குமார் பல்லடம் கிளை சிறையிலிருந்து சேலம் மத்திய சிறைக்கும், எம்.சங்கர் சங்கரன்கோவில் கிளை சிறையிலிருந்து நாங்குநேரி சிறப்பு கிளை சிறைக்கும் துணை ஜெயலராக பதவி உயர்வில் மாற்றப்பட்டனர்.
ஆர்.ஷர்மிளா துறையூர் கிளை சிறையிலிருந்து திருச்சி மத்திய சிறைக்கும், எஸ்.சுந்தரபாண்டியன் கடலுார் கிளை சிறையிலிருந்து தர்மபுரி மாவட்ட சிறைக்கும் பதவி உயர்வில் துணை ஜெயிலர்களாக மாற்றப்பட்டனர்.