/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடல் அட்டைகள் பிடித்த 14 மீனவர்கள் கைது
/
கடல் அட்டைகள் பிடித்த 14 மீனவர்கள் கைது
ADDED : மே 08, 2024 01:12 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் நடுக்கடலில் மீன்களுக்கு பதிலாக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்த 14 மீனவர்களை கைது செய்த வனத்துறையினர் படகுகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரம் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் காப்பாளர் பகான் ஜெக்தீஸ் சுதாகருக்கு பனைக்குளம் அருகே கடலில் சிலர் கடல் அட்டைகள் பிடிப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து மரைன் எலைட் ( கடல் உயர் அடுக்கு) படை யூனிட்-2 ரேஞ்சர் செல்வம், பாரஸ்டர்கள் காளிதாஸ், விநாயகமூர்த்தி கொண்ட குழுவினர் அங்கு சென்றனர். பனைக்குளம் கிருஷ்ணாபுரம் பகுதியில் கடலுக்குள் வலைவீசி கடல் அட்டைகளை பிடித்த 14 மீனவர்கள் அவர்களின் 2 படகுகள் மற்றும் உபகரணங்களை பிடித்து ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் இருந்த 41 கிலோ பச்சை கடல் அட்டைகளை பறிமுதல் செய்து முள்ளிமுனை லட்சம் 58, வீரமாகாளி 44, புதுராஜா 48, கமலநாதன் 40, சத்தியேந்திரன் 53, ராஜா 55, பொன்வயிறு 44, பி.ராஜா 51, சமயச்சந்திரன் 40, சமய செல்வம் 53, சின்னதர்ம அய்யா 41, சீனிசெல்வம் 53, மோர்பண்ணை போதுராஜ் 42 உள்ளிட்ட 14 பேரை கைது செய்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

