/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
/
1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : செப் 03, 2024 02:44 AM

ஆர்.எஸ்.மங்கலம்: திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக சென்ற காரை சோதனை செய்த போது, 30 மூடைகளில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
காரை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடினார். அரிசியுடன் காரை, போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓட்டிச் சென்ற போலீசார், தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
தென்காசி அருகே ஆசாத் நகரில் குற்றாலம் போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். மதுரை பதிவெண் கொண்ட லாரியில், கோழி இறைச்சி இருந்தன.
போலீசார் அந்த லாரியை சோதனையிட்டதில், அதன் உட்பகுதியில் 300 மூட்டைகளில் 15 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.
அரிசி மூட்டை களை குற்றாலம் கலைவாணர் அரங்கில் வைத்துஉள்ளனர்.