sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

லஞ்ச ஒழிப்புத்துறை  பதிவுசெய்த 10 வழக்குகளில் 17 பேர் கைது

/

லஞ்ச ஒழிப்புத்துறை  பதிவுசெய்த 10 வழக்குகளில் 17 பேர் கைது

லஞ்ச ஒழிப்புத்துறை  பதிவுசெய்த 10 வழக்குகளில் 17 பேர் கைது

லஞ்ச ஒழிப்புத்துறை  பதிவுசெய்த 10 வழக்குகளில் 17 பேர் கைது


ADDED : மே 22, 2024 07:58 AM

Google News

ADDED : மே 22, 2024 07:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் 5 மாதங்களில் லஞ்சம் பெற்றதாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை வாங்கும் போது 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 6 பேர் உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகள், 7 அதிகாரிகள், லஞ்சம் வாங்க உறுதுணையாக இருந்த 3 புரோக்கர்கள் சிக்கியுள்ளனர்.

இந்த வழக்குகளில் புகார் கொடுத்த மக்களின் குறைகள் அந்தந்த துறைகளின் மூலம் உடனுக்குடன் அடுத்த நாளிலேயே சரி செய்யப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் திட்டத்தில் 25 ஆயிரம் மதிப்புள்ள பாண்டுகள், வீட்டின் கூரைக்கு மேல் செல்லும் மின் கம்பியை மாற்றி அமைக்கவும், பட்டா மாறுதல் பெறப்பட்டும் பிரச்னைகள் தீர்வு காணப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் யாரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் புகார் தர முன் வர வேண்டும்.

லஞ்சம் தொடர்பான புகார்களை கொடுப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். அவர்களின் குறைகள் உடனடியாக தீர்வு செய்யப்படும்.

பொதுமக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ புகார்களை கொடுக்கலாம்.

டி.எஸ்.பி., 94982 15697, 94986 562169, இன்ஸ்பெக்டர்கள் 94981 88390, 94986 52166, 96000 82798, 94986 52167, அலுவலகம் 04567- 230036, மின் அஞ்சல் dsprmddvac.tnpol@nic.in என்ற முகவரியில் புகார் செய்யலாம், என லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us