ADDED : ஜூன் 27, 2024 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார், : -முதுகுளத்துார் அருகே திருவரங்கம் பகுதியில் விவசாய நிலங்களில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக தகவைலையடுத்து கீழத்துாவல் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருவரங்கம் கிராமத்தில் விவசாய நிலத்தில் மண் அள்ளும் இயந்திரத்தில் லாரியில் மணல் அள்ளிய போது போலீசார் லாரி, இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
பனையடியேந்தல் லோகநாதன் 24, பரமக்குடி முத்தரசு 24, ஆகிய இருவரை கைது செய்தனர்.