/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிளஸ் 2 தமிழ் தேர்வில் 239 பேர் 'ஆப்சென்ட்'
/
பிளஸ் 2 தமிழ் தேர்வில் 239 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 04, 2025 06:28 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 239 பேர் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.
பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று துவங்கியுள்ளது. மாவட்டத்தில் 160 பள்ளிகளைச் சேர்ந்த 6875மாணவர்கள், 7731 மாணவிகளும், தனித் தேர்வர்களாக 431 பேர் என 15ஆயிரத்து 037 மாணவர்கள் 64 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
நேற்று முதல் நாள் தமிழ்பாடத்திற்கான தேர்வில் மாணவர்கள் 228 தனித்தேர்வாளர்கள் 11 பேர் என 239 பேர் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ராமநாதபுரம் நகராட்சிபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்து கூறியதாவது:
காது கேளாத, கண் பார்வையற்றோர், உடல்உறுப்புகளில் மாற்றுத்திறன் கொண்ட 97 மாணவர்கள், எந்தவிதசிரமமின்றி தேர்வு எழுதும் வகையில் சொல்வதைக் கேட்டு எழுதுபவர்கள் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறன்கொண்ட மாணவர்களுக்கு தேர்வெழுதும் நேரத்தில் கூடுதலாக ஒருமணி நேரம் மொழிப்பாட விலக்கு போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வுப் பணிகளில் 1088 பேர் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்புபணியில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர், மாவட்டமுதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் பணிமேற்கொள்வார்கள். அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறை மூலம் உரிய பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து தேர்வு மையங்களிலும் அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டும். மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும் என கலெக்டர்வாழ்த்து தெரிவித்தார். முதன்மை கல்வி அலுவலர் சின்னராஜு,ஆசிரியர்கள் உடனிருந்தனர்.