sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஒரு மாணவிக்கு பாடம் நடத்தும் 2 ஆசிரியர்கள்

/

ஒரு மாணவிக்கு பாடம் நடத்தும் 2 ஆசிரியர்கள்

ஒரு மாணவிக்கு பாடம் நடத்தும் 2 ஆசிரியர்கள்

ஒரு மாணவிக்கு பாடம் நடத்தும் 2 ஆசிரியர்கள்


ADDED : ஜூன் 21, 2024 10:04 PM

Google News

ADDED : ஜூன் 21, 2024 10:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கடம்பூரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஒரு மாணவி மட்டுமே படிக்கிறார். அவருக்கு இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பாடம் நடத்துகின்றனர். காலை 9:00 மணிக்கு வரும் இரு ஆசிரியர்கள், மாணவியின் வருகைக்காக காத்திருக்கின்றனர். அந்த மாணவி 9:30 மணிக்கு பள்ளிக்கு வந்த பின், அவருக்கு பாடம் நடத்தப்படுகிறது.

மேலும் இந்த மாணவிக்காக, கடம்பூர் அருகே குருந்தங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் சமைக்கப்படும் சத்துணவை எடுத்து வந்து வழங்குகின்றனர்.

கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:

கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் நகரங்களுக்கு சென்று விட்டனர்; வயதானவர்கள் மட்டுமே உள்ளனர். திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில், 80 அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இதில் மாணிக்கம்கோட்டை, கடம்பூர், உள்ளிட்ட 11 அரசு தொடக்கப் பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் தான் உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us