ADDED : ஜூலை 31, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி மகாசக்திபுரத்தை சேர்ந்த மீனவர்கள் சதீஷ், புதுராஜா, சேகர் ஆகிய 3 மீனவர்கள் நேற்று முன்தினம் நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். மீன்களுக்காக வலைகளை விரித்து காத்திருந்தனர். நீண்ட நேரம் சென்று வலையை இழுத்த போது தலா 20 கிலோ எடையுள்ள 2 ஆமைகள் சிக்கியிருந்தன.
ஆமைகளை உயிருடன் மீட்டு கடலில் விட்டனர். மீனவர்கள் கூறுகையில், ஆமைகள் வலையில் சிக்கி துடித்ததில் எங்களது மீன்பிடி வலைகள் பல இடங்களில் கிழிந்து சேதமடைந்தது. இதனால் அதிகளவு நஷ்டம் ஏற்பட்டது என்றனர்.
