/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவருக்கு 2 ஆண்டு சிறை
/
அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவருக்கு 2 ஆண்டு சிறை
ADDED : ஆக 29, 2024 02:26 AM

ராமநாதபுரம்:அரசு பஸ் கண்ணாடியை சேதப்படுத்தியவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம் இலுப்பையூரணி, பூசாரிபட்டி மேட்டுத்தெருவை சேர்ந்த நாகு மகன் மாதவன் 41. கட்டுமான தொழிலாளியான இவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே சூச்சனேரி கிராமத்தில் தங்கை வீட்டிற்கு வந்து மாதவன் தங்கியிருந்தார். மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் இருந்த மாதவன் 2023 ஆக.15ல் சனவேலி பஸ் ஸ்டாப்புக்கு வந்த போது திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பஸ் மீது கல்வீசினார்.டிரைவர் லட்சுமணன் 55, புகாரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் மாதவனை கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது.
அரசு தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார். மாதவனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி குமரகுரு தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத்தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

