/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செல்லி அம்மன் கோயிலில் நடந்த 2008 விளக்கு பூஜை
/
செல்லி அம்மன் கோயிலில் நடந்த 2008 விளக்கு பூஜை
ADDED : ஜூலை 16, 2024 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் செல்லி அம்மன் கோயில் 48ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கடந்த 5 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று 2008 விளக்கு பூஜை நடந்தது.
பின் செல்லி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள், விபூதி, திரவியப்பொடி உட்பட 21 வகை அபிஷேகங்கள் நடந்தது. அம்மன் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.
விழாவில் முதுகுளத்துார் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.